விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகரின் வடபகுதியில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்திக்கொண்டு செல்வதால் விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.