நகராட்சி கழிவறை கட்டிடம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-01-22 13:21 GMT

நாகை நல்லியான் தோட்டத்தில் நகராட்சி கழிவறை கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நகராட்சி கழிவறை கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நகராட்சி கழிவறை கட்டிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்