கீழப்பாவூர் யூனியன் குலசேகரபட்டியில் சாலையோரம் உள்ள வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையம், தபால்துறை அலுவலகம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றுக்கு வாறுகாலை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகாலை கடந்து செல்லும் வகையில் சிறிய பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.