மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி தினந்தந்தி புகார்பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் கொசுமருந்து அடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.