அந்தியூர்-பர்கூர் மலைப்பாதையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாறாங்கற்கள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஏராளமான பஸ், லாரிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே பாறாங்கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.