அந்தியூரில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் மூப்பனார் சிலை அருகே ரோட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் குடிநீர் குழாயை சரிசெய்வதற்காக அகற்றப்பட்டது. குடிநீர் குழாயை சரிசெய்தும் தடுப்புச்சுவர் ரோட்டோரத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரோட்டின் நடுவே தடுப்புச்சுவர் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.