திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் வெயில், மழை காலங்களில் பயணிகள் பஸ்கள் வரும் வரை கால்கடுக்க நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.