திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி செல்கின்றன. மேலும் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகளின் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.