பயனற்ற சுகாதார வளாகம்

Update: 2022-07-18 17:47 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் கால்நடை மருத்துவமனை அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் சிதிலம் அடைந்து இருந்ததால் அதை யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். இதன் காரணமாக சுகாதார வளாகம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பெண்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்