பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலையில், சாலை விரிவுபடுத்துவதற்கு முன்பு இருபுறமும் 3 நிழற்குடை இருந்தது. சாலை விரிவுபடுத்தியபோது 3 நிழற்குடையும் அகற்றப்பட்டது. தற்போது பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் வெயில் தாங்க முடியாமல் தலையில் சேலை, துப்பட்டாவை போட்டு கொண்டு பஸ் வரும் வரை வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.