அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தலைமை அஞ்சலகத்தில் ஏராளமான மக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த அஞ்சலகத்தில் சில நேரங்களில் காலை 9.30 மணி வரை பதிவு தபால் கவுண்டரில் யாரும் இருப்பதில்லை. இதனால் சாலை நேரத்தில் அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.