சிதம்பரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் நிற்பதற்கு கூட இடமின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாாிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.