காயல்பட்டினம் வளர்ந்து வரும் நகராட்சியாகும். இங்கு தபால் நிலையம் அருகே உள்ள மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது வாகனங்கள் மிகுந்து ஊர் விரிவடைந்த நிலையில், அங்குள்ள பழமைவாய்ந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த மரங்களையும், மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.