தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சிறுத்தொண்டநல்லூர் செல்லும் சாலையில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். ஏரல் ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து காய்கறிகள், கருவாடு, மண்பாண்டங்கள் வாங்குவதற்கு நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். இங்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?