கடும் துர்நாற்றம்

Update: 2022-12-25 09:13 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகே பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், அவர்கள் தவறி சாக்கடைக்குள் விழும் அபாயம் காணப்படுகிறது. அதில் கழிவுநீரும் நிறைந்து உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்பும் அபாயம் நிலவுகிறது. எனவே பாதாள சாக்கடையை மூட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்