விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர் போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைகின்றனர். எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.