பயனற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2022-12-21 13:25 GMT

கரூர் மாவட்டம் ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஓலப்பாளையம் பிரிவு அருகே அப்பகுதி பயணிகளின் நலன் கருதி லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக அந்த பயணிகள் நிழற்குடையை இந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் இந்த பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து பஸ் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலையின் விரிவாக்கம் காரணமாக பயணிகள் நிழற்குடை உள்ள அந்த வழியாக சென்ற தார் சாலை சுமார் 25 மீட்டர் தள்ளி நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த பயணிகள் நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிழற்குடை அருகே செடி-கொடிகள் முளைத்துள்ளன. நிழற்குடையில் பயணிகள் இல்லாததால் இந்த வழியாக செல்லும் மது பிரியர்கள் மது பாட்டில்களையும், உணவு பொருட்களையும் கொண்டு வந்த இந்த நிழற்குடையில் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு, கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்