நாய் தொல்லை

Update: 2022-12-21 05:14 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் திருவள்ளுவர் நகரில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்தித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாய்கள் குறுக்கிடுவதால் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய் தொல்லைகளை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி