ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் வழியாக செல்லும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கசிவு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் கசிவை சரி செய்வதற்காக அந்த இடத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் கசிவை சரிசெய்து இன்னும் குழியை மூடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு் வருகிறார்கள். உடனே தண்ணீர் கசிவை சரிசெய்து குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.