பெங்களூரு கனகப்பா லேஅவுட் மேடஹள்ளி பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.