பெங்களூரு கசவனஹள்ளி சாலையில் சூடசந்திரா சர்க்கிள் மற்றும் அம்ருதா என்ஜினீயரிங் கல்லூரி இடையே உள்ள சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அடிக்கடி சாலை பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.