புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2022-12-14 13:50 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளை பெற்று வந்தனர். இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்