திருச்செந்தூர் மேல ரதவீதியில் இருந்து பாரதியார் தெருவுக்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.