திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுக்கழிவறை எப்போதும் பூட்டியே கிடப்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.