கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் இதன் வழியாக தினமும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது மரத்தின் கிளை முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.