வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-07-17 18:38 GMT

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் வளைவு பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் அவதிப்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்