கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி அரிசன தெருவில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு சொந்தமாக பொதுப்பாதை உள்ளது. அந்த பொதுப்பாதையை இப்பகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பொதுப்பாதையை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துவிட்டார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.