மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது தற்போது இந்த மையம் சரிவர திறக்கபடுவதில்லை என கூறப்படுகிறது. மாலை நேரங்களில் மட்டும் குறிபிட்ட நேரத்தில் பயணச்சீட்டு மையம் திறக்கப்படுகிறது. இதனால் சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொலை தூர பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணச்சீட்டு முன்பதிவு மையம் முழுநேரமும் திறந்திருக்க நடவடிக்கை எடுப்பார்களா?