சாலையில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்

Update: 2022-12-07 16:28 GMT
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலை அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் உள்ளது. இங்கு இரவு பூட்டிய உடன் அதிகாலையில் இருந்து மறுநாள் மதியம் கடை திறக்கும் வரை விடியவிடிய மதுவிற்பனை நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி தார் சாலை ஓரத்தில் அமர்ந்து பலர் குடிக்கின்றனர். பின்னர் அவர்கள் மது பாட்டில்களை சாலையில் உடைத்து செல்கின்றனர். இதனால் சாலையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கிறது. மேலும், பிளாஸ்டிக் கவரில் கொண்டு வரும் உணவு பொருளை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு செல்கின்றனர். அதேபோல் மதுஅருந்தும் இளைஞர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு தகாத வார்த்தையால் பேசி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்