பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

Update: 2022-12-04 16:29 GMT
குலசேகரன்பட்டினம் ஹசனியா நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதனை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் மழையிலும், வெயிலிலும் நின்று பொதுமக்கள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்