புதுக்கோட்டை மாவட்டம், விஜயபுரம் ஊராட்சி சின்ன கடை தெரு பகுதியில் கடந்த பல நாட்களாக உயர் மின் கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்து எரிய வைத்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.