குரும்பூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள மின்மாற்றியில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருப்பதாக ரமேஷ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து மின்மாற்றியில் புதிய மின்கம்பங்களை மாற்றி அமைத்து புதுப்பித்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.