டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?

Update: 2022-11-30 11:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் மங்கைமடம் கிராமம், சீர்காழி மெயின் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், கடை முன்பு சாலையோரத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கே போட்டு செல்கின்றனர். டாஸ்மாக் கடை சீர்காழி செல்லும் முக்கிய சாலையில் உள்ளதால், இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்