சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

Update: 2022-11-27 10:28 GMT

மங்கலம் நால்ரோடு அருகே போலீஸ் நிலையம், கிராமநிர்வாக அதிகாரி அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தபால்நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி போன்றவை அமைந்துள்ளது. மங்கலம் நால்ரோடு பஸ்நிறுத்தம் பகுதியானது எந்நேரமும் பொதுமக்கள் கூடும் இடமாக உள்ளது. ஆகவே மங்கலம் நால்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாகம் வசதி இல்லாததால் பெண்கள் இயற்கை உபாதைக்கு செல்ல அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்