நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துறையூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம சேவை மைய கட்டிடம் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதி்காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.