சிதம்பரம் நான் முனிசிப்பல் ஊராட்சிக்கு உட்பட்ட புலிச்சமேடு ஏரி சுடுகாடு பகுதியில் சாரயம், கஞ்சாவை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாராயம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். எனவே புலிச்சமேடு பகுதியில் போலீசார் ரோந்து சென்று , சாராயம், கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.