நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட சடையபுரம் வழியாக சிங்கம்பாறை செல்லும் பாதையில் பழங்கால கிணறு ஒன்று உள்ளது. எவ்வித பராமரிப்பு இல்லாமல் அந்த பகுதி முழுவதும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கிணற்றிலும், அதனை சுற்றியுள்ள பகுதியும் குப்பைக்கூளமாகவும், சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையிலும் உள்ளது. அதன் அருகில் தான் தண்ணீர் தொட்டியும், பொது சுகாதார வளாகமும் உள்ளது. கிணறு தரையோடு இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அந்த கிணற்றை தூர்வாரவோ அல்லது தடுப்புச்சுவர் கட்டுவதற்கோ சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?