கோபி சக்தி சாந்தி நகரில் கிருஷ்ணன் வீதியில் ரோட்டு ஓரமாக செடி, கொடிகள் அடர்த்தியாக புதர்போல் வளர்ந்து உள்ளது. மேலும் அங்கு மழைநீரும் தேங்கியுள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்டவை அதில் தங்கிக்கொள்கின்றன. எனவே அங்குள்ள மக்களின் அச்சத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதரை அகற்றவேண்டும்.