திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. சில நாய்கள் வெறிநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.