செங்கோட்டை மகாத்மா காந்தி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் சந்திப்பில் இருந்து வனத்துறை சோதனைச்சாவடி வரையிலும் சாலை முழுவதும் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இந்த வழியாகத்தான் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் செல்கின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.