சேலம் மாவட்டம் நடுவனேரி கிராம ஊராட்சியில் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகளும், கூலித்தொழிலாளர்கள் வெள்ளாடுகளும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு தடுப்பு அம்மை, கோமாரி போன்ற நோய்கள் அதிகமாக பரவுகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நடுவனேரி கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவர் போன்ற அடிப்படை வசதி இல்லை. இதனால் நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுக்கு தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரி மற்றும் கிராம கால்நடை மருத்துவருக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே கால்நடைகளுக்கு உரிய தடுப்பு ஊசி மற்றும் மருத்துவம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை முன் வரவேண்டும்.