ஜல்லி கற்கள் அகற்றப்படுமா?

Update: 2022-11-16 11:10 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாநத்தம் ஊராட்சியில்  8 -வது வார்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. தற்போது அந்த சுகாதார வளாகம் முன்பு  ஜல்லி கற்களை மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே  ஊராட்சி நிர்வாகம் சாலையில் கொட்டியுள்ள ஜல்லி கற்களை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்