கால்நடைகள் தொல்லை

Update: 2022-11-16 10:52 GMT

ஊட்டி பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அவை அசுத்தம் செய்து செல்வதால், அங்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கால்நடை தொல்லையை கட்டுப்படுத்தவும், அதன் உரிமையாளர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்