பெரம்பலூர் நகர் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த விளம்பர பதாகைகள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற வைக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆடி மாதம் காற்றில் விளம்பர பதாகைகள் சாய்ந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.