முறையாக திறக்காத ரேசன்கடை

Update: 2022-11-13 10:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன்கடை மூலம் அந்த பகுதி மக்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த ரேசன் கடை கடந்த சில நாட்களாக சரிவர திறக்கப்படுவதில்லை. ரேசன் கடையை திறந்தாலும், உடனே மூடி செல்கின்றனர். இதனால் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரேசன் கடையை முறையாக திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்