திட்டக்குடி தாலுகா நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துறையூர் கிராமத்தில் உள்ள நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள், வாசகர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளாக இருக்கும் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.