மின்விளக்குகள் பொருத்த வேண்டும்

Update: 2022-11-09 10:06 GMT

ஊத்துக்குளியில் இருந்து வெள்ளைகவுண்டன்புதூர் செல்லும் ஈஸ்வரன் கோவில் வீதி யில் மின் கம்பங்கள் வரிசையாக நடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இந்த சாலை வழியாக ஏராளமான பெண்கள் தொழில் நிறுவனங்களில் பணிமுடிந்து இரவில் செல்லும் போது

சமூக விரோதிகள் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர். தனியாக செல்பவர்களிடம் செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். எனவே வடுகம்பாளையம் ஊராட்சி மன்றம் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி