சட்டவிரோதமாக மது விற்பனை

Update: 2022-11-06 13:27 GMT
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் மெயின் ரோட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுபான கடை இரவு பூட்டியவுடன் கடையிலிருந்து மதுபான பட்டில்களை ஒரு குறிப்பிட்ட நபரிடம் கொடுத்து விடிய விடிய மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். காலை முதல் பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு வரை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி தார் சாலை ஓரத்தில் அமர்ந்து அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மேலும் தாங்கள் பிளாஸ்டிக் கவரில் கொண்டு வரும் உணவு பொருளை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு செல்கின்றனர். அதேபோல் மதுஅருந்தும் இளைஞர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டும், அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்