பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் நம்பியார்குன்னு பகுதி உள்ளது. இங்கு இருமாநில பொதுமக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் பொது கழிப்பிடம் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.