அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இது சாலையோரம் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றால் கூட தெரிவது இல்லை. எனவே சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.